மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 33வது நினைவு தினம்

கரூரில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 33வது நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 33வது நினைவு தினம்- கரூரில் காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு. மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 33 வது நினைவு தினம் இன்று. நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவரை விடுதலைப் புலிகளின் தற்கொலை படை பிரிவினர் மனித குண்டாக மாறி வெடித்ததில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் இதே நாளில் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு மறைந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்ட துணை தலைவருமான ஸ்டீபன் பாபு, எஸ்சி எஸ்டி பிரிவின் மாவட்ட தலைவர் முனீஸ்வரன், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பொது செயலாளர் கனி கண்ணன், மாவட்ட துணை பொருளாளர் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றனர். மேலும், மறைந்த தங்கள் தலைவருக்கு இதய அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story