மறைந்த மக்களின் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்

மறைந்த மக்களின் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்

மறைந்த மக்களின் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்

கரூரில் மறைந்த மக்களின் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்

மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவரும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற MGR அவர்களின், 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினரும், பொது மக்களும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கரூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட அலங்கார மேடையில், அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில், எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

அப்போது தேங்காய் பழம் உடைத்து, கற்பூர தீபம் காட்டி, தங்கள் மனம் கவர்ந்த தலைவரை,இறைவனை வணங்குவதை போல வணங்கி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இந்நிகழ்வில்,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் ஏ.டி.பி கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட பிரதிநிதி அன்பரசு, இளம் பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் லோகநாதன், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், குளித்தலை நகர செயலாளர் அருள்மொழி தேவன், கரூர் மாநகர துணை செயலாளர் ஓம் சக்தி சேகர்,வடக்கு நகர செயலாளர் கரூர் அன்பு,தெற்கு நகர செயலாளர் கோபால், மாவட்ட துணை செயலாளர் ரோஜா, மத்திய நகர துணை செயலாளர் ஜானகி, கரூர் வார்டு கழக செயலாளர் ஜாபர்அலி, புலியூர் பேரூர் கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த மக்கள் தலைவருக்கு, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story