கரூரில் தென்னிந்திய யாதவர் மகா சபை சார்பில் 3-ம் ஆண்டு அன்னதானம்

கரூரில் தென்னிந்திய யாதவர் மகா சபை சார்பில் 3-ம் ஆண்டு அன்னதானம்

அன்னதானம் வழங்கப்படுகிறது 

கரூரில் தென்னிந்திய யாதவர் மகா சபை சார்பில் 3-ம் ஆண்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கரூரில் தென்னிந்திய யாதவர் மகா சபை சார்பில் 3-ம் ஆண்டு அன்னதானம். கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் வைகாசி மாத திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நடப்பாண்டில் மே 12ஆம் தேதி கம்பம் நடும் விழா உடன் துவங்கிய மாரியம்மன் திருவிழாவில், மே 17ஆம் தேதி பூச்சொரிதல் விழா,

அதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இன்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று தென்னிந்திய யாதவ மகாசபை கரூர் மாவட்ட அலுவலகம் முன்பு இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வரிசையில் இன்று அன்னதானத்தை பெற்று சென்றுனர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் அன்பில் ராஜேந்திரன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பாப்பு சாமி, துணைத் தலைவர்கள் பாலாஜி, ஜெகநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்

Tags

Next Story