உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 42 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 42 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 42 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட42 லட்சத்து 26 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்து நிலையான தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலையொட்டி பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு, 2 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கும் பணியில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வழியாக வந்த ஈச்சர் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனைத்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது.. திருச்சி மாவட்டத்திலிருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்காக எடுத்துவரப்பட்டு கேரளா மாநிலங்களில் விற்பனை செய்து அந்த பணத்தை கொண்டு வந்ததாக கணக்காளர் அசோக்குமார், ஓட்டுனர் கரிகாலனிடம் விசாரித்ததில் தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால் 30 லட்சம் பறிமுதல் செய்த அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (சார் ஆட்சியர்) கேத்திரின் சரண்யாவிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து கூறுகையில் ,10 லட்சத்துக்கும் அதிகமாக கணக்கில் வராத பணம் பிடிப்பட்டால் வருமான துறையினரிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.. அதன்படி இந்த கணக்கில் வராத பணம் வருமான வரித் துறை ஒப்படைக்கப்படுகிறது என்றார். இதே போல் பொள்ளாச்சி அடுத்துள்ள நல்லூர் கைகாட்டி பகுதியில் உரிய ஆவணங்களில் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 9 லட்சத்தி 54 ஆயிரத்தி 900 ரூபாய் மேலும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரே நாளில் 42 லட்சத்தி 26 ஆயிரத்து 900 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story