510 பயனாளிகளுக்கு ரூ.4.52 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி

510 பயனாளிகளுக்கு ரூ.4.52 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி

திருமண நிதியுதவி 

மயிலாடுதுறையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 510 பயனாளிகளுக்கு ரூ.4.52 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 510 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 52 இலட்சத்து, 2 ஆயிரத்து 973 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அன்னை தெரசா ஆதரவற்றோர் பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமணம் திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமணம் திருமண நிதி உதவி திட்டம் ,டாக்டர் முத்துலெட்சுமி திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 510 பயனாளிகளுக்கு ரூ.2,36,27,973.60 மதிப்பில் 4080 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்களில் 353 நபர்களுக்கு ரூ.1,76,50,000 திருமண நிதியுதவியும், பள்ளிப்படிப்பு நிறைவு செய்தவர்களில் 157 நபர்களுக்கு ரூ.39,25,000 திருமண நிதியுதவியும் ஆகமொத்தம் ரூ.4 கோடியே 52 இலட்சத்து, 2 ஆயிரத்து 973 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம் இன்றைய தினம் வழங்கப்படுகிறது என்றார்.

Tags

Next Story