5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்.

RTO அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்.
ஐந்து அம்ச கோரிக்கைகள்- கண்ணில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்,ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மோகன், சண்முகம், விஜயலட்சுமி, ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், தனபாக்கியம், ராஜேந்திரன், செந்தில் குமார் உள்ளிட்ட மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் மோகன் குமார் வலியுறுத்தி பேசினார். பின்னர் தேர்தலின் போது, அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயதை கடந்து ஓய்வூதியருக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story