1.58 நிமிடத்தில் 500 மீட்டர் சைக்கிளிங் - 4 வயது சிறுவன் சாதனை

1.58 நிமிடத்தில்  500 மீட்டர் சைக்கிளிங் -  4 வயது சிறுவன் சாதனை

பெற்றோருடன் ஷவின்

ஒரு நிமிடம் 58 விநாடிகளில் சைக்கிளிங்கில் 500 மீட்டர் தூரம் கடந்த 4 வயது சிறுவனின் சாதனையை சோலன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட் என்ற நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நவீன் - சந்தியா தம்பதியரின் மகன் ஷவின்.இந்த சிறுவன் இரண்டு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.ஷவினின் ஆர்வத்தை உணர்ந்த அவரது பெற்றோர் சைக்கிள் வேகமாக ஓட்டுவதற்கு கற்று கொடுத்துள்ளனர். தற்போது நான்கு வயது நிரம்பிய இந்த சிறுவன் ஷவீன் சாலையில் 500 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 58 வினாடிகளில் சைக்கிளை அதி வேகமாக ஓட்டி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இவரது சாதனை சோலன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட் என்ற நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் சிறு வயதில் சைக்கிளை வேகமாக ஓட்டி உலக சாதனை படைத்தது இதுவே முதன்முறை என்பது சிறப்பம்சமாகும். சைக்கிளிங்கில் உலக சாதனையை உருவாக்கியுள்ள ஷவீனுக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.



Tags

Next Story