ஜமாபந்தியில் 516 மனுக்கள் பெறப்பட்டது : மாவட்ட நிர்வாகம்

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 516 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில், கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, புகலூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட ஏழு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொதுமக்கள் மொத்தம் 516 மனுக்களை அளித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள், நில உடமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராமங்களில் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள், பதிவேடுகளில் உள்ளனவா? என்பதையும்,பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

Tags

Next Story