கௌரி மாரியம்மன் ஆலயத்தில் 57வது ஆண்டு தீமிதி விழா !

கௌரி மாரியம்மன் ஆலயத்தில் 57வது ஆண்டு தீமிதி விழா !

தீமிதி விழா

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் கிராமத்தில் 57 ஆம் ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அம்மனாக வரும் சக்தி கரகம் தீமித்த பின்னர் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த கிராமமான அச்சுதராயபுரம் கிராமத்தில் உள்ள‌ பிரசித்தி பெற்ற ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் 57 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது‌.

கடந்த 23ஆம் தேதி கொடியேற்றம், பூச்சொரிதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மன் ரிஷப வாகனம், அன்னபட்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இன்று திமிதி திருவிழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி காப்பு கட்டி விரதம் இருந்த மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள் மற்றும் அலகு காவடி எடுத்த பக்தர்கள் மேளதாள வாக்கியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க வீதி உலாவாக கோவிலை வந்தடைந்தனர்.

கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து தீக்குழியின் முன்பு சக்தி கரகம் மீண்டும் வந்து நின்றது. தொடர்ந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் அலகு காவடி போட்ட பக்தர் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டும் தீ மிதித்தார். மேலும் 16 அடி நீள அலகு குத்தியவாறு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செய்த தீக்குழியை பார்வையிட்டு ஆனந்த பரவசமாக இரண்டாவது முறையாக தீமித்து திருநடனம் ஆடி ச்கதி கரகம் அலயம் சென்றடையும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் மகாதீபாரதனை செய்யப்பட்டு பிரசாதங’;கள் வழங்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் இட்டும் வழிபாடு செய்தனர். மேலும் விண்ணை முட்டும் கண்கவர் வாணவேடிக்கை பக்தர்களை பரவசபடுத்தியது.

Tags

Next Story