மயக்கம் தரும் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 6- பேர் கைது !

மயக்கம் தரும் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 6- பேர் கைது. காவல்துறை நடவடிக்கை.
மயக்கம் தரும் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 6- பேர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும், மயக்கம் தரும் மருந்து பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வெங்கமேடு ரயில்வே பாலத்தின் கீழே மயக்கம் தரும் மருந்து மாத்திரைகளை சில வாலிபர்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து அந்தப் பகுதியில் கரூர் மாநகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் ரோந்து பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியின் போது, உடல் வலிக்கு நிவாரணம் தரும் வகையில் பயன்படுத்தப்படும், மயக்கம் தரும் மருந்து மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த, கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 21, பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் வயது 23, தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் வயது 23, ஈரோட்டை சேர்ந்த விஷால் கார்த்திக் வயது 27, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இலியாஸ் வயது 25, பிரபு 21 ஆகிய ஆறு பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மயக்கம் தரும் மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூபாய் சுமார் 53 ஆயிரத்து 750- மதிப்புள்ள வலி நிவாரண மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை கைப்பற்றியதோடு, இவற்றை விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 7000-த்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து தீவிர விசாரனை கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story