60வயது தூய்மை பணியாளர் உற்சாக நடனம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடனமாடி வைப் செய்த 60 வயது பெண்மணி , தங்களது கவலைகளை மறந்து தூய்மை பணியாளர்கள் உற்சாகமாக நடனம் ஆடியது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தது :-
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி , சுதாகர் ஆகியோர் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வை துவக்கி வைத்தனர். பின்னர் ஊராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு மியூசிக்கல் சேர் , லெமன் இன் த ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வயதானவர்கள் முதல் அனைத்து பெண்மணிகளும் ஆர்வமுடன் பங்கேற்ற விளையாடினர். இதில் கவலைகளை மறந்து அனைவரும் ஒருசேர போட்டி நடந்த இடத்தில் நடனம் ஆடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, வயதான மூதாட்டி ஒருவர் சக பணியாளர்களுடன் ஒன்றிணைந்து நடனமாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
Next Story