பாரதீய மஸ்தூர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு

பாரதீய மஸ்தூர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு

மாவட்ட மாநாடு

கரூரில்,பாரதீய மஸ்தூர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வி.என்.சி. மஹாலில், கரூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைப்பு செயலாளர் மாடசாமி, துணைத்தலைவர் ரவி ஆறுமுகம், டிஎன்பிஎல் எம்பிளாய் யூனியன் பொதுச் செயலாளர் நந்தகோபால், பாரதிய கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சண்முகம், பாரதி அமைப்பு சாரா தொழிலாளர் சங்கபொது செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், உடல் உழைப்பு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு இணையாக நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் மழைக்காலங்களில் பணி செய்ய முடியாத நிலை உள்ளதால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு மழைக்கால நிவாரணமாக மாதம் பத்தாயிரம் வழங்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம், காவிரி ஆற்றில் மணல் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மண்பானை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பொங்கல் விழா கொண்டாட, பொங்கல் பரிசு வழங்கும் போது, மண்பானையும் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும், டிஎன்பிஎல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சர்வீஸ் அடிப்படையில் கிராஜிவிட்டி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story