மனைவி தாக்கியவருக்கு 7- ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை தாக்கியவருக்கு 7- ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு.

மனைவியை தாக்கியவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் - மகிலா நீதிமன்றம் தீர்ப்பு.

கரூர் மாவட்டம், தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, சுக்காம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் வயது 43. இவரது மனைவி கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, சதீஷ்குமார் அவரது மனைவி சத்யாவை கொலை செய்யும் நோக்கில் தாக்கி உள்ளார். இது தொடர்பாக சத்யா அளித்த புகாரின் பேரில், தோகைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று சதீஷ்குமார் குற்றவாளி என நிருபனமானதால், அவருக்கு 7- ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால், மேலும்,6- மாதங்கள் மெய் காவல் சிறை தண்டனை விதித்து மகிளாஅமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்த தோகைமலை வட்ட காவல் ஆய்வாளர், சாட்சிகளை முறையாக ஆஜர் செய்த தோகைமலை காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டியுள்ளார். மேலும், குற்றவாளி சதீஷ்குமாரை, போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Tags

Next Story