மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,50,705 வாக்காளர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில்  7,50,705 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 7,50,705 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று வாக்காளர் வரைவு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை ,பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வரைவு பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 43 ஆண்கள் மற்றும் மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 639 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 23 பேர் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஒன்றிணைத்து 7 லட்சத்து 50 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர்.

Tags

Next Story