760 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன் பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு 760 பயனாளிகளுக்கு 3 கொடியே 87 லட்சத்து5 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா ஆணைகளை வழங்கினார். இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜகுமார் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் ; வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசித்தவர் தமிழக முதல்வர். கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் என்ற மகத்தான திட்டத்தில் வீட்டிற்கு 3 லட்சம் வழங்குகிறார். ஜனவரி மாதம் 26 ஆம் தேதி 2100 பயனாளிகள் கிராமசபை கூட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்ய உள்ளனர். கிராமசபை கூட்டத்தில் மனுகொடுங்கள் அதில் முன்னுரிமை அளித்து வீட்டிற்கான ஆணை வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரூ.46 கோடியில் மருத்துவமனையில் புதிய கட்டடம், ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், பாதாளசாக்கடை சீரமைக்க ரூ.51 கோடி என்று பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
Next Story





