கரூர் அருகே 8 பேர் கைது

கரூர் அருகே 8 பேர் கைது

கோப்பு படம்

திருநீலகண்டர் மண்டபம் அருகே பணம் வைத்து சூதாடிய 8- பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் உழவர் சந்தை பகுதியில், மே 28ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகே உள்ள திருநீலகண்டர் மண்டபம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சின்னாண்டாங் கோயில் ரோடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், எல்ஐசி நகரை சேர்ந்த வெங்கடேஷ், எம்ஜிஆர் நகரை சேர்ந்த சதீஷ்குமார், தண்ணீர் பந்தலை சேர்ந்த கணேசன், கணபதி நகரை சேர்ந்த கந்தசாமி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அபுதாஹிர், ராம் சக்தி நகரை சேர்ந்த நாராயணன், சிவா பில்டிங் தெருவை சேர்ந்த செல்வராஜ் ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 42,000 பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story