ரூ.96 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட குளம் சரிந்து விழுந்து சேதம்

 ரூ.96 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட குளம் சரிந்து விழுந்து சேதம்

சேதமடைந்த குளம்


மயிலாடுதுறையில் ரூ 96 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் சீரமைக்கப்பட்டு வந்த அய்யன்குளம் நடைபாதை கனமழை காரணமாக சரிந்து விழுந்து சேதம்
மயிலாடுதுறையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில்,கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு குளங்கள், நடைபாதை வசதியுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாயூரநாதர் கோயில் அருகில், அமைந்துள்ள தேரடி குளம் எனப்படும் அய்யன் குளம், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபாதை வசதியுடன் சீரமைக்கும் பணிகள்,நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் 2 நாள் பெய்த கனமழையின் காரணமாக, குளத்தின் சுற்றுப்பாதை சரிந்து விழுந்தது. இதனால் சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு நடைபாதை உள்வாங்கியுள்ளது. தற்போது நடைபாதையினை சீரமைக்கும் பணியில் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.. நடைபாதை அமைக்கப்பட்டு வரும்போது இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் சரிந்து விழுந்த சம்பவம், பொதுமக்களிடையே கட்டுமான பணி குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், ஆய்வு நடத்தி கட்டுமான பணியின் உறுதித் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story