மலர் மெட்ரிக் பள்ளியில் 19 ஆம் ஆண்டு விழா. மாணவ-மாணவிகள் உற்சாகம்.
மலர் மெட்ரிக் பள்ளியில் 19 ஆம் ஆண்டு விழா. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டு.
மலர் மெட்ரிக் பள்ளியில் 19 ஆம் ஆண்டு விழா. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு. கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் தாளாளர் பேங்க்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக அலுவலர் வித்யா அனைவரையும் வரவேற்றார். முதல்வர் ஜெயசித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் செல்வமணி நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுத் தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் இளந்தேவன், கம்பன் பள்ளி தாளாளர் அசோகன், இயக்குனர்கள் பெரியசாமி, சுப்பன், மணிவண்ணன், ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவின் இறுதி நிகழ்வாக பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
Next Story