முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு
காவல் நிலையம்
குகை வழி பாதை அருகே நடந்து சென்ற முதியவரை தன்னிச்சையாக சென்று தகராறு செய்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்கு தெரு 6-வது கிராஸ், ஏவிபி நகரை சேர்ந்தவர் நடராஜன் வயது 70. இவர் பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பசுபதிபாளையம் வடக்கு பகுதியில் உள்ள ரயில்வே குகை வழி பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 30 என்பவர், நடராஜனிடம் தன்னிச்சையாக சென்று, தகாத வார்த்தை பேசி தகராறு செய்து உள்ளார்.
அப்போது திடீரென கைகளால் முதியவரை தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடராஜன்,
காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், தகாத செயலில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Tags
Next Story