வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்,சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் - வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை.. பொள்ளாச்சி..ஜூன்..16 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆறு வன சரகங்கள் உள்ளது இந்த வனச்சரக வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டு மாடு, மற்றும் கரடி போன்ற வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அடிக்கடி சாலை ஓரங்களில் உலா வந்து தண்ணீரைத் தேடி செல்வது வழக்கம். அதேபோல் இன்று ஆழியார் சின்னார்பதி அருகே வால்பாறை சாலையில் காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து உலா வந்துள்ளது. பெரும்பாலும் காட்டு யானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டுமென ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஆழியார் வன சோதனை சாவடியிலேயே வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வன சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் வனவிலங்குகளை கண்டால் அவைகளை அச்சுறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்க கூடாது எனவும் மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags

Read MoreRead Less
Next Story