புதிய மாவட்டத்திற்கு பிரம்மாண்ட ஆட்சியரகம்
புதிதாக கட்டப்பட்டு வரும் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால புதிய மாவட்டக் கனவான புதிய மாவட்ட அறிவிப்பை 2020 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். அதே ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு. ஜுன் 12ஆம் தேதி தனி அலுவலர், எஸ்பி நியமிக்கப்பட்டனர். முறைப்படி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மாவட்டமாக செயல்பட துவங்கியது. புதிய மாவட்ட ஆட்சியரகம் கட்ட மன்னம்பந்தல் என்ற இடத்தில் 21 ஏக்கர் நிலத்தை தருமை ஆதீனம் அளித்தது. திமுக அரசு பதவியேற்றதும் 114கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட ஆட்சியரகம் கட்டுவதற்கு நிதியை ஒதுக்கியது. மாவட்ட ஆட்சியரகம் கட்டுமானப்பணியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் துவக்கினார். 7 மாடிக் கட்டிடம் துரிதகதியில் கட்டப்பட்டு தற்பொழுது 96% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, வரும் நவம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் புதிய மாவட்ட ஆட்சியரகம் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் வந்து திறக்கவேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.