கரூர் அருகே மளிகை கடையில் புகையிலை பொருள் விற்றவர் கைது
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பத்மசீலனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தாந்தோணிமலை, வடக்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தனபாலன் மகன் விக்னேஷ் வயது 29 என்பவர், அவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்த 50 ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர்,இது தொடர்பாக விக்னேஷை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 1000- என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.