சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டவர் தற்கொலை
தற்கொலை
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுக்காலியூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கார்த்திக் வயது 33. இவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு கடந்த ஆறு வருடமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக மேற்கொண்ட சிகிச்சையும் அவருக்கு பலனளிக்காத விரக்தியில் வாழ்ந்து வந்த கார்த்திக் மே 29ஆம் தேதி இரவு 10 மணியளவில், பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அவரது மனைவி சௌமியா வயது 21 என்பவர் உடனடியாக தனது கணவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி மே 31 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திக்கின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.