சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரம்ம தீர்த்தம் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடக்கிறது.

பிரம்ம தீர்த்தம் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்ம தீர்த்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி மகன் பாஸ்கரன் வயது 55. இவர், ஜனவரி 4-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில், பிரம்ம தீர்த்தம் சாலை, சிவா டெக்ஸ் அருகே நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி ஜெயலட்சுமி வயது 49 என்பவர், இது குறித்து கரூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த பாஸ்கரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story