பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, எஸ். வெள்ளாளப்பட்டி அருகே உள்ள நரிக்கட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 47. இவர் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அவரது டூவீலரில் பசுபதி பாளையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் பசுபதிபாளையம், செல்வ நகர், விநாயகா பேப்ரிக்ஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் டிராவலர் பஸ், ராஜேந்திரன் ஓட்டிச் சென்று டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு, தலை, இரண்டு கால்கள், கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,
உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பேருந்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய, கரூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் வயது 44 என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.