மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து மீண்டும் ஆய்வு

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து மீண்டும் ஆய்வு

 சிறுத்தை நடமாட்டம்

மயிலாடுதுறை நகரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் செய்தி பரவியதால் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து 22 கிலோமீட்டர் சிறுத்தை இடம்பெயர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மற்றும் கருப்பூர் பகுதிகளில் நடமாடியது வனத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தையின் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தஞ்சை திருவாரூர் மாவட்ட எல்லைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு மயிலாடுதுறை நகர் அருகே நல்லத்துக்குடி ஊராட்சி பழைய பயன்பாடற்ற ரயில்வே தடத்தில் உள்ள தார் பிளாண்டில் பணியாற்றம் ஹரிஹரன் மற்றம் சிலர் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக தெரிவித்து இருப்பது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக காட்டுத்தீ போல் பொதுமக்களிடம் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தெர்மல் டிரோன் கேமரா கொண்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் சேதனை மேற்கொள்’ளப்பட்டது. இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். இரவில் செய்த ஆய்வில் எந்த தடையமும் சிக்கவில்லை என்றும் காலைநேரத்திலா சோதனை செய்த பிறகு இந்த பகுதியில் சிறுத்தை வந்ததா என்று உறுதி செய்ய முடியும் என்று வனத்துறையினர்

Tags

Next Story