தனியார் பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து !

தனியார் பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து !

வழக்கு பதிவு

தனியார் பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தனியார் பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, பூலாம்பாளையம் அருகே உள்ள மூர்த்தி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 68. இவர் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மார்ச் 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில், கோவையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது தனியார் பள்ளி பேருந்தை ஓட்டி சென்று கொண்டிருந்தார். இவரது பேருந்து ஜெ.ஜெ சாலை பிரிவு அருகே வந்தபோது, எதிர்திசையில் கரூர், ஆண்டங்கோவில் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் வயது 46 என்பவர், வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த டூ வீலர், ஆறுமுகம் ஓட்டிச் சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காமராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காமராஜர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story