சகோதரன் இறந்த துக்கம் தாளாமல் வாலிபர் தற்கொலை

கரூரில் சகோதரன் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள செட்டியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 32. மீனவர்.இவரது மனைவி சுமித்ரா வயது 41. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் சகோதரர் பரோட்டா சதீஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால், ராஜ்குமார் மிகவும் கவலை அடைந்து வாழ்ந்து வந்தார். தனது சகோதரன் இழந்த துக்கம் தாங்க முடியாமல் அக்டோபர் 27ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது மனைவி சுமித்ரா வீடு திரும்பிய போது வீட்டில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பெயரில் ,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராஜகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story