கரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

கரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

காவல் நிலையம் 

கரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியானர்.

திருச்சி மாவட்டம், கேகே நகர், எல்ஐசி காலனி அருகில் உள்ள ஐயப்ப நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ஆண்டனி வில்சன் வயது 26. இவர் பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம், கரூர் மாவட்டம் வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட செம்மடை அருகே உள்ள பேப்ரிக்ஸ் நிறுவனம் அருகே சென்றபோது, அதே சாலையில் இவருக்கு முன்பாக தென்காசி மாவட்டம், திருவேங்கடம், ஆலங்குளம் காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் வயது 33 என்பவர் ஓட்டிச் சென்ற கண்டைனர் லாரி,திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால், பின்னால் டூவீலரில் சென்ற ஆண்டனிவில்சன் டூவீலர் கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆண்டனிவில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஆண்டனிவில்சனின் தந்தை ஆரோக்கியசாமி, இது குறித்து காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த ஆண்டனி வில்சன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,

இது தொடர்பாக லாரியை விபத்து ஏற்படும் வகையில் ஓட்டிய ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story