கரூரில் கோடை மழையை நடனமாடி கொண்டாடிய வாலிபர்

கரூரில் கோடை மழையை நடனமாடி கொண்டாடிய வாலிபர்

கோடை மழையில் நடனமாடும் வாலிபர்

கரூரில் கோடை மழையை நடனமாடி கொண்டாடிய வாலிபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகி வந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில் அடித்து கரூர் மாவட்டத்தை வாட்டி வதைத்தது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அனைத்து மக்களும். அண்மையில் தமிழக முழுவதும் லேசானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மே 19, 20-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை செய்தது.

நேற்று மாலை 4 மணியளவில் துவங்கிய மழை நின்று நிதானமாக இடி மின்னல் இல்லாமல் கனமழையாக இரவு வரை பெய்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இன்று கரூரில் கொட்டி தீர்த்த மழையின் அளவு 601.2 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இத்தகைய மழை பெய்ததால், அதனை கொண்டாடும் விதமாக கரூர் மினி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது ஏறி, வாலிபர் ஒருவர் நடனமாடி ஆட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் தற்போது கரூரில் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story