நள்ளிரவில் டூவீலரில் விபத்து
கரூர் அருகே நள்ளிரவில் டூவீலரில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் சுரேஷ் வயது 25. இவர் ஜூன் 12-ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், கரூர் - பசுபதிபாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது, வாகனம் கட்டுப்பாட்டை, இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுரேஷின் உறவினர் வடக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ஹேமலதா வயது 22 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.