மூலகாட்டனுர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து.
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், குளித்தலை, பெரிய பாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (63). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூல காட்டனூர், பெட்ரோல் பங்க் எதிரே,திருச்சி- கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவட்டம், புலியூர், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மருது பாண்டியன் (49) என்பவர் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற சுந்தரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கீழே விழுந்த சுந்தரத்திற்கு தலை, வலது கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலனஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சுந்தரத்தின் மகன் சதீஷ்குமார் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags
Next Story