டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, புஞ்சை தோட்டக்குறிச்சி, அர்ஜுன தெருவை சேர்ந்தவர் முருகேசன் வயது 53. இவர், நவம்பர் 28ஆம் தேதி காலை 6 மணி அளவில், அவருக்கு சொந்தமான டூவீலரில் கரூர்- சேலம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, அதே சாலையில் நாமக்கல் மாவட்டம், மோகனூர், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சென்ற கார், முருகேசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது
. இதில் வாகனத்துடன் கீழே விழுந்த முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் பட்டு, சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த முருகேசனின் தங்கை மஞ்சுளா வயது 46 என்பவர், இதுகுறித்து கரூர் காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்
, உயிரிழந்த முருகேசன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான விக்னேஷ் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.