வீட்டின் கேட்டை உடைத்து ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள டூவீலர் திருட்டு
தாந்தோணிமலை காவல் நிலையம்
கரூர் மாவட்டம், அப்பிபாளையம் அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ரகுநாத் 23., இவரும், இவரது தாயாரும் அவரது வீட்டில் வசித்து வருகின்றனர். ரகுநாத் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இரவு உறங்க சென்று விட்டனர். மறுநாள் காலை 9 ஆம் தேதி காலை 6 மணி அளவில் எழுந்து பார்த்த போது அவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ரூபாய் 1 3/4 லட்சம் மதிப்பிலான கேடிஎம் டியூக் என்ற டூவீலர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் முன் கேட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். இதனால், தனது வாகனம் மர்மநபர்களால் களவாடப்பட்டு உள்ளது என்பதை அறிந்து, இது குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், சீப்லா தோப்பு அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்கிற சந்தனதுரை 23 என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் 23 என்பவரும், சசிகுமார் 33 என்பவரும் சேர்ந்து இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், டூவீலரையும் மீட்டனர். பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்