மொத்த விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த வேன் பறிமுதல்

மொத்த விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த வேன் பறிமுதல்

மொத்த விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த வேன் பறிமுதல்

மயிலாடுதுறையில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடை ஏஜென்சி அபராதம் விதித்து போலீசார் வேனை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டர். அப்போது, பூக்கடைத்தெரு என்ற இடத்தில் தனியார் மொத்த வியாபார கடையில் லோடு வேனில் பொருட்கள் இறங்கியதை பார்த்துள்ளனர். அந்த வேனை சோதனையிட்டதில், அதில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேப்பர் இலை, கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உள்ள சென்று ஆய்வு செய்த போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவந்து தெரியவந்தது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சுமார் 300கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அக்கடைக்கு ரூ.10 ஆயிரம், திருநாகேஸ்வரம் தனியார் ஏஜென்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து லோடு வேனை பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் விதமாக, தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story