மயிலாடுதுறையில் லாரி மோதி ஸ்கூட்டியில் சென்ற பெண் பலி
ராஜேஸ்வரி
மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து.சிங்கப்பூரில் பணியாற்றிவருகிறார்.இவரது மனைவி ராஜேஸ்வரி(41). இவர் 10ஆம் வகுப்பு படித்துவரும், மகனை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விட்டுவிட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். பள்யிலிருந்து மயிலாடுதுறை தென்னமரச்சாலை வழியாக சென்றுள்ளார். தனியார் திருமணமண்டபத்திற்கு எதிரே உள்ள சாலை பிரிப்பான் பகுதியில் சென்றபோது, பின்னால், படுவேகமாக வந்த லாரிமோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி ராஜேஸ்வரி தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மயிலாடுதுறை போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Tags
Next Story