மயில்களுக்கு பாட்டு பாடி உணவளிக்கும் பெண்

பொள்ளாச்சி அருகே தேசிய பறவையான மயில்களுக்கு பாட்டுப்பாடி பெண் ஒருவர் உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா சந்திரசேகர். இவர் வசிக்கும் வீட்டிற்கு உணவு தேடி வரும் நமது தேசிய பறவையான மயில்களுக்கு தானியங்களை தினமும் பாட்டு பாடி அருகில் சென்று தனது கைகளால் உணவாக வைத்து வருகிறார்.ஆரம்ப காலத்தில் கோவை மாநகர் பகுதியில் உள்ள வடவள்ளி பகுதியில் தங்கி இருந்ததாகவும் வீட்டில் தாய் தந்தை ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததை அடுத்து மன உளைச்சலில் இருந்து வெளி வருவதற்காக பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் கிராமத்தில் குடியேறி வசித்து வருகிறார்..

அப்பகுதியில் நாள்தோறும் காலை மாலை என உணவு தேடி வரும் மயில்களுடன் பழகியதாகவும் எங்கள் இல்லத்தை தேடி வரும் மயில்களுக்கு பாட்டு பாடி உணவு கொடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் இறைபக்தி தன்னை மனசோர்வில் இருந்து மீட்டதாகவும் அதற்கு உறுதுணையாக உணவு தேடி வரும் இந்த மயில்களை பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.. தேசிய பறவையான மயிலுக்கு உணவளிக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..

Tags

Read MoreRead Less
Next Story