மது விற்பனை செய்த பெண் உள்பட இருவர் கைது

மது விற்பனை செய்த பெண் உள்பட இருவர் கைது

கோப்பு படம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மே 14 ஆம் தேதி காலை 11- மணி முதல் மதியம் 12 வரை பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, மன்மங்கலம் பழைய டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த விற்பனையில் ஈடுபட்ட ,கரூர், முத்துராஜபுரம், காந்தி சாலையைச் சேர்ந்த நீலமணி வயது 25 என்பவரை கைது செய்தனர்.

இதே போல என்.புதூர் அருகே வெள்ளதாரை பகுதியில் ரவிக்குமார் மனைவி மலர்கொடி மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, இருவரிடமிருந்து 13 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story