மின்வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த நபரிடம் திருடிய இளைஞன் கைது

மின்வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த நபரிடம் திருடிய இளைஞன் கைது
X

விசாரணை 

கரூர் மாவட்டம், மின்வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த நபரிடம் திருடிய இளைஞன் கைது.
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட, பசுபதிபாளையம், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் வயது 24. இவர் பிப்ரவரி 16ஆம் தேதி காலை 11 மணியளவில், வெங்கமேடு, கொங்கு நகர் மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது,அங்கு வந்த, கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா, மாங்கா சோழிபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற மதன்குமார் வயது 19 என்ற இளைஞர், ராம் குமார் வைத்திருந்த ரூ 270-ஐ களவாடி சென்றுள்ளார். தன்னிடம் இருந்த பணம் களவாடப்பட்டதை அறிந்த ராம்குமார் இது தொடர்பாக வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, மதன் என்கிற மதன் குமார் பணத்தை களவாடியது தெரியவந்தது. எனவே, இளைஞரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story