கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி பிரபாகர் தலைமையில் நடந்த கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் காவல்துறையினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜன், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். பொதுவாக தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரியும் இடங்களில், அவர்களுக்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல், சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒரு கட்டாயத்தின் பேரில் எவரையும் பணி செய்ய வற்புறுத்த கூடாது. இதனை கருத்தில் கொண்டு, அனைவரும் இந்த சூழலை ஒருமனதாக ஏற்றுக் கொள்வதற்காகவே இந்த கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி மொழியை வாசிக்க,அனைவரும் அதனை தொடர்ந்து உறுதிமொழியை வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

Tags

Next Story