மயிலாடுதுறையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 

மயிலாடுதுறையில் திமுக தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
மயிலாடுதுறை அருகே மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என்று மத நல்லினக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியை சனாதனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்ற காரணத்தை முன்னிறுத்தி ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் 1948 டிசம்பர் 30 அன்று சுட்டுக் கொன்றனர். காந்தி கொல்லப்பட்டது குறித்து சில அமைப்பினர் நியாயம் பேசுவதை கண்டித்தும் காந்தியடிகள் இழிவு படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என்று மத நல்லினக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்றது.மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன்,மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, மங்கை சங்கர், திருக்கடையூர் அமிர்த விஜயகுமார், இளையபெருமாள், இமய நாதன், முருகமணி தமிழ் தொழில்நுட்ப பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட திமுகவின் அனைத்து பொறுப்பாளர்கள் இஸ்லாமிய, கிறிஸ்துவ, இந்து மத தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story