மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாக்களிப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, வாக்காளர் என்பதை பெருமை கொண்டு தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் எவ்வித அச்சமும், மதம், இனம், சமூக தாக்கமின்றி வாக்களிப்போம் என்பதை அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், 18- வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6, வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் பதிவு செய்தலுக்கு படிவம் 6யு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6டீ, பெயர் நீக்குதல் படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தத்திற்கு படிவம்; 8 பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார். விழிப்புணர்வு பேரணியில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்காளர் தின விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். தொடர்ந்து, மயிலாடுதுறை தியாகி.ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட பாடலை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, மயிலாடுதுறை வட்டாட்சியர் சபீதா தேவி கலந்து கொண்டனர்.

Tags

Next Story