மது போதையில் விபத்து - தட்டி கேட்டவருக்கு பாட்டில் தாக்கு
காவல் நிலையம்
கரூர் மாவட்டம் குளித்தலை, தண்ணீர் பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் வயது 45. இவர் லாரி டிரைவர். இதேபோல திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 45. இவரும் லாரி டிரைவர். இவர்கள் இருவரும், கரூர் காவல் எல்லைக்குட்பட்ட மொச்சகொட்ட பாளையம் பகுதியில் செயல்படும், அக்சரா லாரி வீல் அலைன்மென்ட் கடை அருகே நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது கரூரை அடுத்த விஸ்வநாதபுரி சால வாய்க்கால் தெருவை சேர்ந்த வேலு வயது 27 மற்றும் விஸ்வநாதபுரியை சேர்ந்த தமிழ் வயது 35 ஆகிய இருவரும் மது போதையில் டூவீலரில் அங்கு வந்து முருகானந்தம் நிறுத்தி இருந்த லாரியின் பின்னால் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனால் முருகானந்தம் வேலுவை தட்டி கேட்டுள்ளார். அப்போது டூவீலரில் வந்த வேலு மற்றும் தமிழ் ஆகிய இருவரும் முருகானந்தம் மற்றும் ரவியை தகாத வார்த்தை பேசி, பாட்டிலால் தாக்கி உள்ளனர். இதில் டிரைவர் ரவிக்கு முன் நெற்றி, இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக முருகானந்தம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். இந்த விசாரணையின் முடிவில் லாரி மீது மோதி விட்டு, தகாத வார்த்தை பேசி, பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய வேலுவை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தகாத செயலில் ஈடுபட்ட மற்றொரு நபரான தமிழ் -ஐ கரூர் மாநகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்.