மணல்மேடு போலீசாருக்கு பயணப்படி 3மாதமாக வழங்கவில்லை
காவல் நிலையம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம்,பாலையூர், பெரம்பூர்,செம்பனார் கோவில், பாகசாலை, சீர்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, பூம்புகார்,பொறையார் மற்றும் சீர்காழி, மயிலாடுதுறையில் அனைத்துமகளிர் காவல் நிலையங்கள்,போக்குவரத்து, மதுவிலக்கு பிரிவு என 20 காவல் நிலையங்களுக்கும்மேல் இயங்கி வருகின்றன.
தமிழக முழுவதும் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு பயணிப்படி வழங்கப்படுகிறது. பயணப்படிக்காண விபரங்களை எழுதி அந்தந்த நிலையை காவல் ஆய்வாளிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினால் குறைந்தபட்சம் ரூபாய் 2000 பயணப்படி வழங்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் மாதந்தோறும் நிலுவை இன்றி பயணப்படி முறையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாத காலமாக மணல்மேடு காவல் நிலையத்திலிருந்து பயணப்படி காண எந்தவித நடவடிக்கையும் இல்லை . மணல்மேடு காவல்நிலையத்தில் பணி புரியும் 40 காவலர்களுக்கும் மூன்று மாத காலமாக பயணப்படி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய மேல் அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது தஞ்சை மண்டல டி .ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.