கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பாமக வேட்பாளர் உறுதி

கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க நடவடிக்கை: பாமக வேட்பாளர் உறுதி

பாமக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு 

மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலைகள் சீரமைக்கப்பட்டு இயங்குவதற்கும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முறையாக பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காளி பகுதியில் உள்ள ஶ்ரீ மந்தகரை காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு பரப்புரையை தொடங்கிய இவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் திரண்டு பொன்னாடை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். காளி, கன்னியாநத்தம், பனையூர், பாண்டூர், கொற்கை உள்ளிட்ட மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரப்புரையின் போது பேசிய வேட்பாளர் ம.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தொகுதியில் உள்ள தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட சர்க்கரை ஆலைகள் சீரமைக்கப்பட்டு இயங்குவதற்கும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முறையாக பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல்மேடு அரசு கல்லூரி தரம் உயர்த்தப்படும், சட்டக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி போன்று தொகுதி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

Tags

Next Story