கரூரில் நடிகை பாத்திமா பாபு பிரச்சாரம்

கரூரில் நடிகை பாத்திமா பாபு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

,தமிழர்களின் தேசிய வியாதி மறதி- கரூரில் நடிகை பாத்திமா பாபு விளக்கம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, அதிமுக கட்சி பிரச்சாரத்திற்காக தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளை களத்தில் இறக்கி ஆதரவை திரட்டி வருகின்றனர். இதன் அடிப்படையில், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்கு ஆதரவு திரட்டும் வகையில், நேற்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்து பாளையம் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழ் திரைப்பட நடிகை பாத்திமா பாபு. அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து ஆதரவை தெரிவித்தனர். அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய பாத்திமா பாபு, திமுகவினர் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். இரண்டு அடி நிலமாவது வாங்கியவர்கள் கரூர் தொகுதியில் எவரேனும் உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், அதனை நாம் மறந்து விட்டோம். தமிழர்களின் தேசிய வியாதியே ஞாபக மறதி தான் என தெரிவித்த அவர், இந்த கரூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக ரூபாய் 77 கோடி மதிப்பில் மூன்று திட்டங்களை செயல்படுத்தியவர் தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதே 77 கோடி ரூபாய் திமுகவினரிடம் கிடைத்துவிட்டால், உடனே ரெட் ஜெயின் மூவிஸை அழைத்து வந்து திரைப்படம் எடுப்பார்கள் என்றும், அந்த பணத்தை வைத்து கரூர் மக்களுக்கு ஏதேனும் செய்வாங்கங்குறீங்க! கண்டிப்பா செய்ய மாட்டாங்க. திமுக நடத்துவது கொடுங்கோல் ஆட்சி, அது தீமை ஆட்சி, அது குடும்ப ஆட்சி. எனவே, ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் அவர்கள் மீதான அதிருப்தியை நாம் வாக்குப்பதிவு அன்று காட்டுவோம் என்று பேசினார். அப்போது கூட்டத்தினர், கைகளை தட்டி கரவொலி எழுப்பினர்.

Tags

Next Story