ஆதிகேசவபெருமாள் செங்கமலத்தாயார் திருக்கல்யாணம் - பக்தர்கள் பங்கேற்பு

ஆதிகேசவபெருமாள் செங்கமலத்தாயார் திருக்கல்யாணம் -  பக்தர்கள் பங்கேற்பு

ஆதிகேசவபெருமாள் செங்கமலத்தாயார் திருக்கல்யாணம் - பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் ஆலய திருக்கல்யாணம் உற்சவம்,திரளான பக்தர்கள் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கமலத்தாயார் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்காரம் ஆகியவை நடைபெற்ற நிலையில் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் வசந்த மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். அதனையடுத்து வேதியர்கள் மந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவங்கள் சடங்குகள் நடைபெற்றது. நிறைவாக மாலை மாற்றும் நிகழ்ச்சியும் மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story