அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் பயிற்சி பட்டறை
பயிற்சி பட்டறை
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் பயிற்சி பட்டறை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,
சமீபகாலமாக நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் செய்தி போதை பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறிவிட்டது போதைப் பொருட்கள் கடத்தலுக்கு தலைவனாக இருக்கிற ஜாபர் சாதிக் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி இருவரும் அவருடன் தொழில் முறை கூட்டுதாரர்களாக இருப்பதை பார்த்து உலகமே பயந்து கொண்டிருக்கிறது.
போதைப் பொருள் கடத்தலுக்கு தலைவன் ஜாபர் சாகித் என்று சொன்னால் அவரை தூக்கு உச்சி முகுந்து தலையில் வைத்து சுமந்தது முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பம் இவர் 2026 வரை முதலமைச்சராக நீடிக்க மாட்டார் இந்த போதைப் பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசும் போது இன்றைய சூழலில் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை இந்த ஆட்சியில் ஏதும் நல்லது நடக்காததால் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இன்றைக்கு தமிழகத்தில் போதைப் பழக்க வழக்கத்தில் இளைஞர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது ஆட்சியாளர்கள் காவல்துறையினர் வருமானம் வந்தால் போதும் என சுயநலமாக இருக்கின்றனர் என குற்றம் சாட்டினர்.