மாதவிடாய் காலத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

பெரிய மஞ்சுவளி யில் கிராம மக்களை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அவர்களது வாழ்வாதாரம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். பின்னர், பெண்கள் 35 வயதை கடந்து விட்டால், அவர்கள் மாதவிடாய் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்த பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும்,கிராம பகுதியில் இருக்கும் பெண்கள் இந்த விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் உயிரிழப்பு போன்ற சிக்கலான சூழ்நிலையை சந்திக்க கூடிய அவல நிலை உள்ளது. இதனால், அவர்களது குடும்ப, பொருளாதார சூழ்நிலையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

இதனை தவிர்க்க அவர்கள் மாதவிடாய் காலத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பெரிய மஞ்சுவளி ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி தங்கள் ஊராட்சி பகுதியில் மயானம் அமைத்து தர கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட எம்.பி. ஜோதிமணி ஆவண செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் வடிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story