கல்வி தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் 2024-2025 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவகள் வெளியாகி அதில் மயிலாடுதுறை மாவட்டம் 10 ஆம் வகுப்பில் 27 வது இடமும்,12 ஆம் வகுப்பில் 29வது இடமும், 11 ஆம் வகுப்பில் 35வது இடமும் பெறப்பட்டுள்ளது.
தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாணவர்களை ஊக்கப்படுத்திட வேண்டும்.2024-2025 கல்வியாணடி;ல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் பொதுத்தேர்விற்கான சிறப்பு கையேடு வழங்கி,அதில் உள்ள பாடங்களை தொடர்ந்து கற்பிக்க வேண்டும்.குறிப்பாக ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா விடைகளை நன்கு கற்பித்து,மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
2024-2025 கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று நூறு சதவீதம் தேர்ச்சி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி,மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர்,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துக்கனியன் உள்ளனர்.